Monday, December 21, 2009

நல்ல முன்னேற்றம்!

தற்போது டி.வி-யில் வரும் 'ஆக்ஸ் பூஸ்ட்' என்ற பாடிஸ்ப்ரே-வின் விளம்பரத்தை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அதில் அந்த திரவியத்தின் வாசனையில் மயங்கிய இளம்வயது பெண் லிப்டில் உடன் வரும் பையனை பலாத்காரம் செய்து விடுகிறாள். மற்றொரு தளத்தில் லிப்ட் நின்றவுடன் அந்தப் பெண் வெளியேறிவிட மீண்டும் அதில் ஏற வரும் நடுத்தர வயது பெண்மணியும் அந்தப் பையனை கிறக்கத்துடன் பார்க்க அத்துடன் அவ்விளம்பரம் முடிந்து விடுகிறது.
இதில் விசேஷம் என்னவென்றால் ஆங்கிலச் சேனல் ஒன்றில் (WB) முதல் பெண் வெளியேறியவுடன் வரும் ஒரு ஆணும் அதற்கடுத்த விளம்பர இடைவேளையில் அறுபது வயது கிழவியுமெல்லாம் வந்து அந்தப் பையனை கிறக்கத்துடன் பார்க்கிறார்கள். நல்ல முன்னேற்றந்தான்! (ஆங்கிலச் சேனலில் மட்டும்தான் இந்த அரிய வாய்ப்பு என்பதை நினைவில் கொள்க!)

1 comment:

  1. அட இதிலே மட்டுமா முன்னேத்தம் ! பின்னே, 2020க்குள்ளார வல்லரசு ஆகியாகணுமே சாமீ. 2012லே ஒலகம் அழிஞ்சி நாசமாப் போயிடும்னு வெள்ளக்காரன் வேற சினிமாவை காட்டி பயமுறுத்தரான். (நல்லா கெளப்பராங்கய்ய பீதிய்..யே!) அதுக்குள்ளார முடிஞ்சதிலேயெல்லாம் முடிஞ்சளவுக்கு முன்னேறிப்படணுமில்லையா! (முன்னேத்தம் முக்கியம் அமச்சரே!!! )

    ReplyDelete