ஒரு படைப்பாளி வாரப் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியின்
முடிவில் கூறியிருந்த வலி நிறைந்த வார்த்தைகள் தான் இந்த இடுகைக்கான துவக்கம். அந்த படைப்பாளி, திரைப்பட இயக்குநர் மணிவண்ணன்.
கோபுரங்கள் சாய்வதில்லை, இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், சின்னத்தம்பி பெரியதம்பி
என வெரைட்டியான வெற்றிகளை தந்தவர். சுமார் 36 படங்களை இயக்கிவிட்டு தற்போது மீண்டும்
அடுத்த படத்தை துவக்கியுள்ளார்.
அதையொட்டி இவர் சமீபத்தில்
ஒரு வாரப்பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியின் கடைசியில், ‘ஒரு கலைஞனை சாந்தமான மனநிலையில்
செயல்பட விட்டாலே போதும். அருமையா படம் பண்ற நேரத்துல எல்லாம் விமர்சனம்னு தொந்தரவு
பண்ணிட்டு, ரிட்டயர் ஆகும்போது பாராட்டாதீங்க. அது தான் முக்கியம்’ என முடித்திருந்தார்.
ஒரு கலைஞனின் வலி நிறைந்த வார்த்தைகள் அவை.
கலைஞனின் மனது எப்போதும் ஏங்குவது கைதட்டலுக்கு மட்டும் தான்
என்பது இவரது வார்த்தைகள் மூலம் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. நிகழ்காலத்தையும்,
எதிர்காலத்தையும் மட்டுமே நினைக்காமல் கடந்த காலங்களையும் கொஞ்சம் நினைத்தால் என்ன
?