தான் எழுதிய கவிதையின் முடிவில் தனது பெயரைக் குறிப்பிடும் சிலர் மற்றவரின் கவிதையை பதிவிடும்போது அந்தக் கவிஞரின் பெயரைக் குறிப்பிடுவது இல்லை.
இதனால், அந்தக் கவிதையையும் எழுதியது இவர்தான் என நினைத்து சிலர் புகழ்கின்றனர். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்காமல் இருப்பதுதான் வருத்தத்திற்குரியது.
மற்றொன்றில், அந்தக் கவிஞர், மற்றொரு கவிஞர் எழுதிய கவிதையை பதிவிட்டபோது அந்தக் கவிஞரின் பெயரை முதலிலேயே குறிப்பிட்டு விட அதை தலைப்பு என நினைத்து பலர் இவரை, சூப்பர், கீப்இட்அப், பிரமாதம் என ஏகத்துக்கும் புகழ்ந்து கமெண்ட் போடுகின்றனர். ஆனால், இவற்றுக்கெல்லாம் அந்த கவிஞர் லைக்ஸ் மட்டும் போட்டு வருவதுதான் கொடுமையிலும் கொடுமை!
இன்னும் ஒரு முக்கியமான விஷயம் காப்பி - பேஸ்ட். கொஞ்சம்கூட கூச்சமே இல்லாமல் மற்றொருவர் பதிவிட்ட ஒரு கருத்தை (அதுவும் சுடப்பட்டதே!) தன்னுடைய சொந்தக் கருத்தைப்போல வெளியிட்டு வருவது. குறைந்தபட்ச நேர்மைகூட இல்லாத இவர்கள் மற்றவர்களின் நேர்மையை விமர்சித்து வருவதைத்தான் ஜீரணிக்க முடியவில்லை.
இன்னும் சிலர் திரைப்படப் பாடலில், சரணத்தில் வரும் வரிகளை எழுதிவிட்டு கமுக்கமாக இருந்து விடுகின்றனர். இதற்கும் விசில் பறக்கிறது.
இதை எழுத வேண்டாம் என ஒரு வாரத்துக்கும் மேலாக காலம் தாழ்த்தி வந்தும் முடியாமல் இன்று எழுதியே ஆகவேண்டியதாகிவிட்டது.
உஸ்...அப்பா....எப்படியோ ஒரு பதிவப் போட்டாச்சு...!!!