சென்ற வாரம் 'கண்களுக்கு குளிர்ச்சியான' ஒரு வீக் என்டு வேளையில் கோவையில் இருந்து ஈரோட்டிற்கு அரசு பேருந்து ஒன்றில் ஏறினேன். பேருந்தில் நான்தான் முதல் ஆள். பின் சில நிமிடங்களில் ஒரு பெண்மணியும் கல்லூரியில் படிக்கும் அவரது மகளும் பேருந்தில் ஏறினர். ஏறும் போதே அப்பெண்மணி தனது மகளிடம்,'வேற பிரைவேட் பஸ் எதுவுமில்லையா?' எனக் கேட்டுக் கொண்டே ஏறினார். அதற்கு அவரது மகள்,'இல்லை. அதுவுமில்லாம அவன் வேகமாப் போவான்' என பதிலுரைத்தார். ஆனாலும் தன் மகள் கூறிய அப்பதிலில் திருப்தியடையாத அந்த தாய் முன் இருக்கையில் பெட்டி படுக்கைகளுடன் அமர்ந்த பின்னும் பேருந்தை விட்டு கீழிறங்கி 'வேற பிரைவேட் பஸ் ஏதாவது கண்ணில் படுகிறதா?' என ஒரு சுற்று பார்த்து விட்டு தான் மீண்டும் பேருந்தில் வந்தமர்ந்தார்.
இந்த ஒரு சின்ன விஷயத்தில் கூட அரசை ஆதரிக்க தயாராயில்லாத இவர்களைப் போன்றோருக்கு 'புள்ள படிப்ப முடிச்சதும் காசு கொடுத்தாவது கவர்மெண்டு வேலை வாங்கிடனும்!' என்ற 'உயர்ந்த லட்சியம்' மட்டும் உண்டு.
உண்மைதான் .. அந்த அரசு வேலைக்கான ஆர்வம் கூட, கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான்.
ReplyDeleteமக்களுக்கு தனியார் நிறுவனங்கள் மீதான கவர்ச்சி திட்டமிட்டே ஏற்படுத்தபடுகிறது. இன்றும் அரசை தாங்கிப் பிடித்தபடி நவரத்தினமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் பொதுத் துறைகளை .. விற்பதற்கும் ,, அதில் வரும் காசில் அரசாங்கத்தை ஓட்டலாம் என்கிற என்னத்தில்தானே இந்த அரசாங்கத்தை நடத்துபவர்களும் இருக்கிறார்கள் .. ?!
தோழமையுடன் ...
இரா.சிந்தன்.
www.sindhan.info