Sunday, December 27, 2009

ஒரே ஒரு கேள்வி !

கிறிஸ்துமஸ் தினத்தன்று காலையில் சூரியச் செய்தியில் சென்னை மறைமாவட்ட பேராயரின் வாழ்த்துக்களை வாங்கிக் கொண்டு அப்படியே வேறு சேனல்களில் மேயத் துவங்கிய போது பொதிகை கண்ணில் பட்டது. அதைச் தாவிச் செல்ல விடாமல் ஹரிஹரனும் லெஸ்லியும் 'கலோனியல் கசின்ஸ்' ஆக 'கிருஷ்ணா நீ பேகனே…' என கர்நாடக இசையையும் மேற்கத்திய இசையையும் தேனாய் கலந்து காதில் ஊற்றிய அந்தப் பாடலுக்கு ஒரு ஆண் பரதம் ஆடிக் கொண்டிருந்தார். பெயர் தெரியவில்லை, சுமாராக இருந்தது: ஆனால் நல்ல கற்பனை வளம். அந்தப்பாடல்-நடனக் காட்சி முடிந்தவுடன் பட்டுப் புடவையுடன் ஒரு பாவை தோன்றி, The Next Song, Maathaa… Paraashakthi… is என குயிலாய் கூவினார். அடுத்து ஆங்கிலத்தில் அந்தப் பாடலின் ராகம், தாளம் பற்றிய குறிப்பு அட்டையும் (ஒரே ஒரு வினாடிதான்) காண்பிக்கப்பட்டது. பின் 'மாதா…பராசக்தி…வையமெல்லாம் நிறைந்திருப்பாய்…' என தமிழில் ஒலித்த அந்தப் பாடலுக்கு கொஞ்சம் வயதான ஆணும் பெண்ணும் ஆடத் துவங்கினர். ஆடலும் பாடலும் முடிந்தவுடன் A Dhoordharshan Presnsentation என ஆங்கிலத்தில் எழுத்துப் போட்டார்கள்.

உடனடியாக என்னுள் தோன்றிய கேள்வி, 'உங்கொய்யால, சென்னை என்ன இங்கிலாந்துலயாடா இருக்குது?'

2 comments:

  1. ஹாப்பி நியூ இயர் ....

    ReplyDelete
  2. நாங்கள்ளாம் பொரந்ததே இங்கிலாந்துலதான் ... ஆல் இன் ஆல் அலகுராஜானா .. என்ன அமெரிக்கா வரைக்கும் தெரியும் ..

    ReplyDelete